Madurai Happy Street crowd

மதுர குலுங்க குலுங்க… ஹேப்பி ஸ்ட்ரீட்டில் முண்டியடித்த கூட்டம்!

டிரெண்டிங் தமிழகம்

5 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மதுரை அண்ணா நகர் பகுதியில் “WOW MADURAI” என்ற தலைப்பில் வாரத்தின் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை இன்று (செப்டம்பர் 24) மதுரை மாநகராட்சி சார்பில் HAPPY STREET நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாநகராட்சி நிர்வாகம் எதிர்பார்த்ததை விட ஏராளமான இளைஞர்கள், இளம் பெண்கள் மற்றும் குடும்பத்தினருடன் வந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சூரி, தமிழக பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி மேயர், ஆணையாளர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருந்ததால் மேடையின் முன்பு செல்வதற்கு இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் முண்டியடித்துக் கொண்டனர்.

இதில் சிலர் பேரிக்கார்டை தாண்டி உள்ளே விழுந்ததால் கூட்ட நெரிசலில் பலருக்கும் காயம் ஏற்பட்டது, மேலும் சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன் மயக்கம் அடைந்தனர்.

தொடர்ந்து காவல்துறையினர் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பொருட்டு ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தி வந்தனர்.

பாதுகாப்பு கருதி 108 ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதியும் ஏற்படுத்தி தரவில்லை , காவல்துறையினர் கட்டுக்கடங்காத அளவு கூட்டம் நிறைந்து இருந்ததன் காரணமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி  பாதிலேயே நிறுத்தப்பட்டதால் பெரிதும் எதிர்பார்த்து வந்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இராமலிங்கம்

ஆத்திகரும் நாத்திகரும் இணைந்த கபில் ரிட்டர்ன்ஸ் விழா

கூட்டணி முறிவு நிலைப்பாட்டில் மாற்றமில்லை: ஜெயக்குமார்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *