இளையராஜா இசையமைத்த என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு லிடியன் நாதஸ்வரம் தனது தந்தை மீது படுத்துக்கொண்டு பியோனோ வாசித்த வீடியோ இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் லிடியன் நாதஸ்வரம். இவர் இசையமைப்பாளர் வர்ஷா சதீஷ் என்பவரது மகனாவார். தனது இரண்டு வயது முதல் இசைக்கருவிகளை வாசித்து வருகிறார். மோகன்லால் நடித்த பரோஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளரானார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இவர் சிறப்பாக பியோனா வாசித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்தநிலையில், இவர் தனது தந்தையுடன் இணைந்து பியானோ வாசித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில், லிடியன் நாதஸ்வரம் தனது தந்தையின் மீது படுத்துக்கொண்டு இசைஞானி இளையராஜா இசையமைத்த என் இனிய பொன் நிலாவே பாடலுக்கு பியானோ வாசித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா சார் இசையமைத்த என் இனிய பொன் நிலாவே பாடலை , அப்பா பாடிய போது அவருக்கு உதவ நினைத்து பியானோ வாசித்தேன். அப்பா இதனை வீடியோவாக எடுத்துள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
முத்துச்சாமி தலைமையில் தேர்தல் பணி: நேரு நம்பிக்கை பேட்டி!
கோயம்பேடு வழி மெட்ரோ ரயில்கள் நிறுத்தம்!