அண்டார்டிகாவில் 4 மாதங்களாக நீடித்த இரவு இன்று (ஆகஸ்ட் 24) சூரிய உதயத்தின் மூலம் விடிந்துள்ளது.
உலகத்தில் தென் துருவம், வட துருவம் என இரண்டு துருவ பகுதிகள் இருக்கின்றன. இந்த பகுதிகளில் 24 மணி நேரத்திற்கு மேலாக இரவு நீடித்தால் அது துருவ இரவு என்று அழைக்கப்படுகிறது.
இதில் தென் துருவ பகுதியான அண்டார்டிகாவில் ஆண்டுதோறும் நீண்ட இரவு 4 மாதங்களுக்குச் சூரிய உதயமே இல்லாமல் தொடர்ந்து நீடிக்கும்.
நீண்ட இரவு நேரத்தில் வானம் பச்சை நிறங்களில் காட்சி அளிப்பதை பல பகுதிகளில் இருந்து மக்கள் ஆர்வமாக வந்து பார்த்துச் செல்கிறார்கள். பல புகைப்பட கலைஞர்கள் புகைப்படங்கள் எடுத்து சென்றனர்.
இந்த ஆண்டு அண்டார்டிகாவில் நீண்ட இரவு கடந்த மே மாதம் 13 ஆம் தேதி தொடங்கியது. மே 13 ஆம் தேதிதான் அண்டார்டிகாவில் கடைசியாகச் சூரியன் உதித்தது.
ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி மையம் 4 மாதங்களுக்குப் பிறகு இன்று சூரியன் உதித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
துருவ பகுதிகளில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் குளிர் அதிகமாகவே இருக்கும். நீண்ட இரவு காலம் குளிரின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்டார்டிகாவில் வெயில் காலத்தில் 10 டிகிரி செல்ஷியஸ் மற்றும் குளிர் காலத்தில் -40 டிகிரி செல்ஷியஸ்-ஆக வெப்பநிலை இருக்கின்றது.
மோனிஷா
5 மாதம்.. 5 கண்டங்கள்… 52 நாடுகள்: கின்னஸ் சாதனை படைத்த சிறுவன்!