ஃபிஃபா உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்காக தங்க ஐபோன்களை லியோனல் மெஸ்ஸி ஆர்டர் செய்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஃபிஃபா உலகக் கோப்பை திருவிழா கத்தாரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பாகத் தொடங்கிய இறுதிப் போட்டியில் இரு அணிகளும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் அர்ஜென்டினா 4-2 என்ற கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அர்ஜென்டினா மட்டுமல்லாது உலகம் முழுவதும் இருந்த கால்பந்து ரசிகர்களும் மெஸ்ஸி ரசிகர்களும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
இதனையடுத்து அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸிக்கு 2022 ஆம் ஆண்டுக்கான ஃபிஃபாவின் சிறந்த கால்பந்து வீரர் என்ற விருது வழங்கப்பட்டது. கடந்த 14 ஆண்டுகளில் 7வது முறையாக 35 வயதாகும் மெஸ்ஸி இந்த விருதைப் பெற்றுள்ளார்.
இப்படி உலகக் கோப்பை வென்றதில் இருந்து இணையத்தை ஆக்கிரமித்த லியோனல் மெஸ்ஸி மீண்டும் இணையத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளார். காரணம் அவர் 2022 உலகக் கோப்பையை வென்றதற்காக அர்ஜென்டினா அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தங்க ஐபோன்களை ஆர்டர் செய்துள்ளார்.

மொத்தம் தங்கத்தால் செய்யப்பட்ட 35 ’ஐபோன் 14’ போன்களை “idesigngold” என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து மெஸ்ஸி ஆர்டர் செய்துள்ளார்.
தற்போது மெஸ்ஸி ஆர்டர் செய்த ‘கோல்ட் ஐபோன்ஸ்’ புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
மோனிஷா
“தேர்தல் வெற்றியை கொண்டாடும் மனநிலையில் இல்லை”: இளங்கோவன்
தேர்தல் ஆணையரை நியமிக்க புதிய விதிமுறை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!