சிறுத்தை ஒன்று சூரிய நமஸ்காரம் செய்வது போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
காடுகளில் வாழும் விலங்குகள், பறவைகளின் நடவடிக்கைகள் இணையத்தில் அவ்வப்போது பலரது கவனத்தையும் ஈர்க்கும். வன அதிகாரிகள் பலரும் காடுகளில் தாங்கள் பார்க்கும் விலங்குகளின் வித்தியாசமான நடவடிக்கைகளை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பகிர்வார்கள்.
அந்தவகையில் சிறுத்தை ஒன்று தனது கால்களை முன்னும் பின்னும் நகர்த்தி உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை வன அதிகாரி சுசாந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
21 நொடிகள் உள்ள அந்த வீடியோவில் அடர்ந்த மலைப்பகுதியில் சிறுத்தை ஒன்று தனது கால்களை முன்னும் பின்னும் நகர்த்தி சோம்பல் முறிக்கிறது. இந்த காட்சிகள் சிறுத்தை உடற்பயிற்சி செய்வது போன்று அமைந்துள்ளது.
சுனந்தா நந்தா தனது ட்விட்டர் பதிவில், “சிறுத்தை சூரிய நமஸ்காரம் செய்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். ரஷ்யாவில் உள்ள சிறுத்தைகள் தேசிய பூங்காவில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
சிறுத்தையின் சீக்ரெட் ஆஃப் பிட்னஸ், சிறுத்தைக்கு யார் யோகா கற்றுக்கொடுத்தது என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
செல்வம்
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கந்துவட்டிக் கொடுமை: ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிப்பு!