Lava Blaze Pro 5G

இந்தியாவில் அறிமுகமானது Lava Blaze Pro 5G ஸ்மார்ட் போன்: விலை எவ்வளவு?

டிரெண்டிங்

இந்தியாவில் உள்ள பட்ஜெட்டிற்குள்ளான ஸ்மார்ட் போன்களில் லாவாவும் ஒன்று. நேற்று லாவா இன்டர்நேஷனல் நிறுவனம் தனது லாவா பிளேஸ் புரோ 5ஜி ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. மேலும் அக்டோபர் 3 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட் போன் லாவா இணையதளம் மற்றும் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும் என்ற தகவலையும் தெரிவித்திருக்கிறது.

Lava Blaze Pro 5G ஸ்மார்ட் போன் இரண்டு வண்ணங்கள், 120Hz புதுப்பிப்பு விகிதத்துடன், 6.8 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது.

Media Tek Dimensity 6020 ப்ராசசர், ஆன்ராய்டு ஓஎஸ் 13 மற்றும் 50 மெகா பிக்செல் கொண்ட இரண்டு ரியர் கேமரா, 8 மெகா பிக்செல் உடன் முன்பக்க செல்ஃபி கேமரா இடம் பெற்றுள்ளது.

8GB ரேம் 128GB ஸ்டோரேஜ் கொண்ட இந்த Lava Blaze Pro 5G ஸ்மார்ட் போன் ரூ.12,499க்கு இந்தியாவில் விற்பனைக்கு வரும் என லாவா இன்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது.

லாவா பிளேஸ் புரோ 5ஜி ஸ்மார்ட் போன் தொடர்பான முழு விவரங்களையும் பார்க்கலாம்:

பொது அம்சங்கள்

ப்ராண்ட்: லாவா
மாடல்: Blaze Pro 5G
விலை(இந்தியாவில்): ரூ.12,499
அறிமுகப்படுத்தப்பட்ட தேதி: 26 செப்டம்பர் 2023
படிவ காரணி: டச் ஸ்கிரீன்
அளவுகள்: 168.70 x 76.70 x 8.96
பேட்டரி: 5000 mAh (fast charging)
நிறங்கள்: ரேடியன்ட் ஃபியர்ல், ஸ்டெரி நைட்
டிஸ்ப்ளே அம்சங்கள்:
புதுப்பிப்பு விகிதம்: 120Hz
ரெசல்யூசன் ஸ்டேன்டர்ட்: FHD+
திரை அளவு: 6.8 இன்ச்
ரெசல்யூசன்: 1080 x 2460 pixels
ஒரு இன்ச்சிற்கான பிக்செல்: 396

Lava Blaze Pro 5G

Hardware அம்சங்கள்

ப்ராசசர்: octa-core
ப்ராசசர் மேக்: Media Tek Dimensity 6020
ரேம்: 8GB
ஸ்டோரேஜ்: 128GB
விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜ் மற்றும் வகை: முடியும், microSD வகை
1000GB வரை ஸ்டோரேஜ் விரிவாக்கம் செய்ய முடியும்.

இவ்வாறாக Lava Blaze Pro 5G ஸ்மார்ட் போனில் அனைத்து வசதிகளும் சிறந்த முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

-பவித்ரா பலராமன்

சென்னை – திருப்பதி ரயில் சேவை நாளை முதல் ரத்து!

கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் சூப்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *