ரூ.999 விலையில் JIO போன் அறிமுகம்!

டிரெண்டிங்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரிலையன்ஸ் தொலைத்தொடர்பு பிரிவான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் ஜியோ பாரத் என்ற 4ஜி தொழில்நுட்ப செல்போனை நேற்று (ஜூலை 3) அறிமுகம் செய்துள்ளது.

மேலும், அந்த நிறுவனம் இதில் உள்ள சிறப்பம்சங்கள் வாடிக்கையாளர்களை கவரும் என்றும் கூறியுள்ளது.

ஜூலை 7 ஆம் தேதி முதல் ஜியோ பாரத் செல்போன் சேவை தொடங்கப்படும் என்று கூறியுள்ள ஜியோ நிறுவனம் இதன் விலை ரூ. 999 என்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆகாஷ் அம்பானி, “இந்தியாவில் இன்னும் 25கோடி மொபைல் போன் பயனர்கள் 2ஜி சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.

நாடு இப்போது 5ஜியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இணைய வசதி உள்ள இந்த போனை உருவாக்கியுள்ளோம்” என்று கூறியுள்ளார்.

சிறப்பம்சங்கள்

இந்த போன் 71 கிராம் எடையுடன் கூடியது. இது 4ஜியில் வேலை செய்கிறது. HD குரல் அழைப்பு, FM ரேடியோ, 128GB SD மெமரே கார்டு ஆதரவு போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

Launch of JIO Phone at Rs.999

மொபைலில் 1.77 இன்ச் TFT திரை, 0.3MP கேமரா, 1000mAh பேட்டரி, 3.5mm ஹெட்ஃபோன் ஜாக், சக்திவாய்ந்த ஒலிபெருக்கி மற்றும் டார்ச் ஆகியவை உள்ளன.

ஜியோ பாரத் வி2 மொபைலின் வாடிக்கையாளர்கள் ஜியோ சினிமாவின் சந்தாவுடன் ஜியோ-சாவின் 80 மில்லியன் பாடல்களுக்கான அணுகலைப் பெறுவார்கள்.

வாடிக்கையாளர்கள் Jio-Pay மூலம் UPI இல் பரிவர்த்தனைகளையும் செய்ய முடியும். இந்த மொபைல் 22 இந்திய மொழிகளில் வேலை செய்யும்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

திமுக எம்.பி ஞானதிரவியம் முன் ஜாமீன் மனு தள்ளுபடி!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!

ரூ.2000… மனுவைத் தள்ளுபடி செய்த டெல்லி நீதிமன்றம்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0