பியூட்டி டிப்ஸ்: பிளவுஸில் என்னவெல்லாம் லேட்டஸ்ட்!
சேலை வாங்குவதைவிட மேட்ச்சிங் பிளவுஸ் வாங்குவதில் அதிக நேரத்தைச் செலவிடும் பெண்களுக்கு பஃப் ஸ்லீவ் தற்போது டிரெண்டில் இருக்கிறது.
இதில் லெக் ஆஃப் மட்டன் ஸ்லீவ், ஜூலியட் பஃப், பிஷப் ஸ்லீவ், சிம்பிள் பஃப் என பல வகைகள் இருக்கின்றன.
கைப்பகுதி மட்டும் பருமனாக இருப்பவர்கள் தோள்பட்டை பகுதியையும், ஸ்லீவ் பகுதியையும் இணைக்கும் இடத்தில் சிம்பிள் பஃப் வைத்துக்கொள்ளலாம்.
ஒல்லியான உடல்வாகுள்ள பெண்களுக்கு லெக் ஆஃப் மட்டன் ஸ்லீவ், ஜூலியட் பஃப் ஸ்லீவ் பொருத்தமாக இருக்கும்.
ஸ்லீவ்களுக்கு மட்டும் நெட்டடு மெட்டீரியல் பயன்படுத்தினால் டிரெண்டியாக இருக்கும். பட்டுப்புடவைக்கான பிளவுஸ் எனில் மணிக்கட்டு பகுதியில் மட்டும் ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்து கொள்ளலாம்.
முதுகுப்பகுதிக்கு `கீ ஹோல் நெக் லைன்’ (Key hole neckline) பிளவுஸும் இப்போதைய டிரெண்ட்.
பின் கழுத்துப் பகுதியில் தொடங்கி, முதுகுப்பகுதி வரை இடைவெளி இருக்கும் வகையிலான ஃபிஷ் கீ ஹோல் நெக் லைன்’ (Fish key hole neckline) ஒல்லியான உடல்வாகு கொண்ட பெண்களுக்கும், மழைத்துளி வடிவில் இருக்கும் `ட்ராப் ஷேப் கீ ஹோல்’, பருமனான பெண் களுக்கும் பொருத்தமாக இருக்கும்.
கழுத்துப்பகுதிக்கு கீழ் மூன்று, நான்கு செ.மீ இருக்கும் `லூப் வித் பட்டன்’ (Loop with button neckline) நெக்லைனை எல்லா உடல்வாகு கொண்டவர்களும் அணியலாம். கீ ஹோல் நெக் லைனில் டைமண்ட் ஷேப், ரவுண்ட் ஷேப் என விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம்.
க்ளோஸ் நெக்லைன் விரும்பும் பெண்கள் `க்ரூ நெக்’ (Crew neck), `போட் நெக்’ போன்றவற்றைத் தேர்வு செய்யலாம்.
டிசைனர் புடவைகளுக்கான பிளவுஸில் முதுகுப்பகுதியில் ‘போ’ (Bow) வைத்து தைத்தால் டிரெண்டியாக இருக்கும். பேக் நெக்லைன் வழக்கமாக இருந்தால் போதும், ஆனால் முதுகுப்பகுதியில் ஏதேனும் டிசைன் வேண்டும் என விரும்பும் பெண்கள் ஏதேனும் பேட்டர்ன் வொர்க் செய்யலாம்.
உதாரணமாக, புடவைக்கு கான்ட்ராஸ்ட் நிறத்தில் பிளவுஸ் அணியும்போது, கழுத்திலிருந்து முதுகின் நடுப்பகுதி வரை புடவையின் துணியைக் கொண்டு பேட்ச் வொர்க் செய்து கொள்ளலாம்.
காட்டன் புடவைகளுக்கான பிளவுஸ் டிசைன் செய்யும்போது முதுகு மற்றும் கைப்பகுதிகளில் துணி பட்டன்கள் வைத்துத் தைக்கலாம். முதுகுப்பகுதிக்கு பிளவுஸின் நிறத்திலேயே டிசைனர் பட்டன்களையும் தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
காலர் நெக், போட் நெக் போன்றவை உங்களை போல்ட் லுக்கில் காட்டும். வீ நெக், டீப் நெக் போன்றவை ஒல்லியான உடல்வாகுள்ள பெண்களுக்கு பொருத்தமாக இருக்கும்.
பருமனான உடல்வாகுள்ள பெண்களுக்கு ரவுண்ட் நெக் பெஸ்ட் சாய்ஸ். இவையெல்லாம் பொதுவான ஸ்டைலிங் டிப்ஸ்.
எந்த உடையையும் தன்னம்பிக்கையுடன் அணியும்போது எல்லோரும் பேரழகிகளே’’ என்கிறார்கள் ஃபேஷன் டிசைனர்ஸ்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கொள்ளு இட்லி
இதுலயும் விழா தேவைதானா? அப்டேட் குமாரு
வெள்ளத்தில் மூழ்கிய கார்களுக்கு ‘தண்ணீ’ காட்டும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள்!
1000 போட்டிகளுக்கு பிறகு, முதல் ரெட்கார்டு வாங்கிய ஜெர்மனி கோல்கீப்பர்!