அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி காலை 08:46 மணிக்கு இரட்டை கோபுரத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 19 அல்கய்தா தீவிரவாதிகள் 4 பயணிகள் விமானங்களை கடத்தி, நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையம், ராணுவ தலைமையகமான பென்டகன் மற்றும் பென்சில்வேனியா என மூன்று இடங்களில் தாக்குதல் நடத்தினர்.
வல்லரசு நாடான அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 2,977 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். உலக வரலாற்றில் நடைபெற்ற மிக மோசமான பயங்கரவாத தாக்குதலாகவும் இந்த சம்பவம் பார்க்கப்பட்டது.
இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 23 ஆண்டுகள் ஆகிறது. இந்த தாக்குதல் நடத்தப்பட்ட போது, அங்கிருந்த போட்டோ ஜர்னலிஸ்ட் பில் பெக்கர்ட் இடிபாடுகளை புகைப்படங்களாக பதிவு செய்தார். போர் மற்றும் இது போன்ற தாக்குதல்களை போட்டோக்களாக எடுத்து டாக்குமெண்ட் செய்து வைப்பதுதான் பெக்கர்ட்டின் முக்கிய பணி.
அந்த வகையில் நியூயார்க் வர்த்தக மையத்தின் மீது நடந்த தாக்குதலையும் பதிவு செய்து கொண்டிருந்தார். அப்போது, பெக்கர்ட்டும் கொல்லப்பட்டார். கேனான் டி30 ரக கேமரா கொண்டு அவர் புகைப்படம் எடுத்து கொண்டிருந்த போது, 5 லட்சம் டன் எடை கொண்ட கண்ணாடி மற்றும் காங்கிரீட் அவர் மீது 120 கிலோ மீட்டர் வேகத்தில் விழுந்துள்ளது. சம்பவ இடத்திலேயே அவர் உடல் சிதைந்து பலியாகி போனார்.
சாகும் தருவாயிலும் கடைசியாக அவர் கிளிக்கிய படம்தான் இப்போது உலகமெங்கும் பேசப்படுகிறது. செப்டம்பர் 11 தாக்குதலில் உயிரிழந்த ஒரே புகைப்பட கலைஞர் பெக்கர்ட்தான். இவரின் உடலை சம்பவம் நடந்து நான்கு நாட்களுக்கு பிறகு மீட்புப்படையினர் மீட்டனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
பூமி பூஜையில் பங்கேற்க விடாமல் தடுத்த திமுகவினர்… கே.பி.முனுசாமி சாலை மறியல்!
விஜய்யை மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைத்த திருமாவளவன்