மறுநாள் விருந்தினர்கள் வருகிறார்கள் என்கிற சூழ்நிலையில் அவர்களுக்காக ஸ்பெஷலாக என்ன செய்து அசத்தலாம் என்று நினைப்பவர்கள் இந்த குல்சா செய்து அசத்தலாம். வீட்டிலேயே விருந்தினர்களுடன் பேசிக்கொண்டே சாப்பிட ஏற்ற சுவையான உணவு இந்த குல்சா.
என்ன தேவை?
மைதா – 2 கப்
சர்க்கரை – ஒன்றரை டீஸ்பூன்
ஈஸ்ட் – கால் டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – முக்கால் டீஸ்பூன்
ராஜ்மா – ஒரு கப்
தக்காளி, வெங்காயம் – தலா 2
சீரகம், மிளகாய் தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலா – ஒரு சிட்டிகை
உப்பு, எண்ணெய், பால் – தேவையான அளவு
பச்சைமிளகாய், இஞ்சி,
கொத்தமல்லித்தழை,
எலுமிச்சைச்சாறு – அலங்கரிக்க.
எப்படிச் செய்வது?
ஈஸ்ட்டை பாலில் சிறிது நேரம் ஊற வைக்கவும். மைதாவுடன் சர்க்கரை, உப்பு, வெண்ணெய், பேக்கிங் பவுடர் சேர்த்துப் பிசையவும். இதுவே பேஸ். ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை விழுதாக அரைக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு சீரகம் தாளித்து வெங்காயம், தக்காளி விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி 2 கப் தண்ணீர் சேர்த்து 5 விசில் வந்ததும் இறக்கவும்.
பேஸ்-இல் இருந்து ஒரு பெரிய உருண்டை எடுத்து சிறிது கனமான ரொட்டியாக தட்டவும். தவாவில் ரொட்டியை போட்டு எண்ணெய்விட்டு மூடி போட்டு வேக விடவும். பின் ரொட்டியை திருப்பிப் போட்டு மூடி வேகவிட்டு எடுக்கவும். சூடான குல்சாவின் மேல் ராஜ்மாவைப் பரப்பி அதன்மேல் மிக பொடியாக வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு கொண்டு தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ராஜஸ்தானி ஸ்பெஷல் மசூர்தால் புலாவ்!
சண்டே ஸ்பெஷல்: சமையலுக்கு தினசரி தேங்காய் எண்ணெய் உபயோகிப்பது நல்லதா?
டூருக்கு கிளம்பியாச்சு… அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: விக்கிரவாண்டி… திமுகவின் மலைக்க வைக்கும் டோட்டல் பட்ஜெட்!