கொரியன் பெண்களின் சருமம், பொதுவாக பளிங்கு மாதிரி இருக்கும். இதற்குக் காரணம், அவர்கள் நாளொன்றுக்கு இரண்டு தடவை சி.டி.எம் (CTM – Cleansing, Toning and Moisturizing) செய்கிறார்கள்.
அதாவது, பாலேட்டால் சருமத்தை சுத்தப்படுத்தி, பன்னீர் அல்லது அரிசி களைந்த தண்ணீரால் டோன் செய்கிறார்கள். பிறகு, மேலே ஒரு மாய்ஸ்ரைசர் க்ரீமை அப்ளை செய்கிறார்கள். இது, பேஸிக் சி.டி.எம்.
பாதாம் ஆயில் சருமத்தின் ஆழம் வரை சென்று சுத்தமாக்கி, சருமத்தை இறுக்கமாக்கும். முதலில் பாதாம் ஆயிலை முகம் முழுக்கத் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து, வட்ட வடிவில் மசாஜ் செய்யுங்கள்.
பிறகு, மைல்டான ஷாம்பூவால் முகத்தைக் கழுவி, ஃபேஸ் கிளாத்தை (டிஷ்யூ பேப்பர்போல இருக்கும்) தண்ணீர் அல்லது பன்னீரில் நனைத்து, முகத்தை நன்கு துடைத்து எடுங்கள். அழுக்கு, பிசுக்கு, இறந்த செல்கள் என அனைத்தும் வெளியேறிவிடும்.
அடுத்த ஸ்டெப்பாக, ஃபேஸ் சீரம் அல்லது ஸ்கின் ஒயிட்டனிங் சீரம், அல்லது ஆன்டி ஏஜிங் சீரம் என உங்களுக்குத் தேவையான சீரத்தை முகத்தில் தடவி, 10 நிமிடம் அப்படியே விட்டுவிடுங்கள்.
சருமம் அவ்வளவு சீரத்தையும் உள்ளிழுத்துக்கொள்ளும். இதன் மேலே கார்பன் அல்லது கோல்டு மாஸ்க் போட்டு, அரை மணி நேரம் கழித்து எடுங்கள். சருமத்துக்கு போஷாக்குக் கிடைக்கும்.
கொரியன் பெண்கள் பலர் காலையில், அரிசி களைந்த தண்ணீரில்தான் முகத்தை வாஷ் செய்கிறார்கள். ஒரு கப் அரிசியில் 2 கப் தண்ணீர்விட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து, அந்தத் தண்ணீரை மட்டும் வடித்து, பாட்டிலில் ஊற்றி, ஃபிரிட்ஜில் வையுங்கள்.
இதை ஒரு வாரத்துக்குப் பயன்படுத்தலாம். முகத்தை வாஷ் செய்ததும், இந்த ரைஸ் வாட்டரை முகத்தில் ஸ்பிரே செய்யுங்கள்.
அரிசி களைந்த நீரில் இருக்கும் சத்துகள், சருமத்தின் துவாரங்கள் வழியாக உள்ளே சென்று, சுருக்கங்களை நீக்கி, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும்.
இதேபோல, அரிசியைக் குழைய வேகவைத்து, கஞ்சி மாதிரி மாற்றி, ஃபேஸ் பேக்காகப் போட்டுக்கொள்கிறார்கள். அரிசி சருமத்தை சுத்தமாக்கும்; இறுக்கமாக்கும்; மென்மையாக்கும்; நிறத்தைக் கூட்டும்; வழுவழுப்பாகவும் ஆக்கும்.
கழுத்து மற்றும் நெற்றியில் சுருக்கங்கள் இல்லாமல் இருக்க, வைட்டமின் `ஈ’ மற்றும் கொலாஜின் கலந்த க்ரீமை முகத்தில் அப்ளை செய்து, மசாஜ் செய்யலாம்.
இந்த க்ரீம் வேண்டாம் என நினைப்பவர்கள்… பாலேடு, வெண்ணெய் இரண்டையும் சம அளவு எடுத்துக்கொண்டு, சிறிதளவு வெள்ளரிச்சாறை கலக்கவும்.
கழுத்து, முகம், நெற்றி என மசாஜ் செய்தால், அந்தப் பகுதிகளில் இருக்கும் சுருக்கங்கள் நீங்கி, சருமம் இறுக்கமாக மாறும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
யூடர்ன் அடித்த ஆளுநர்: அப்டேட் குமாரு
தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா