வலை பயிற்சியின் போது விராட் கோலி நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.
Virat Kohli's funny gesture towards Hardik Pandya 🤣🤣#viratkohli pic.twitter.com/QE40Y3VXQt
— 𝙒𝙧𝙤𝙜𝙣🥂 (@wrognxvirat) July 27, 2023
ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கு பயிற்சி எடுக்கும் விதமாக இந்திய அணி வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அணியின் ஆல் ரவுண்டர் பாண்டியா வீசிய பந்தை விராட் கோலி தவற விடுகிறார். இதனை தொடர்ந்து பாண்டியாவை கலாய்க்கும் விதமான விராட் கோலி நடனமாடுகிறார். இந்த வீடியோ காட்சிகளை கோலி ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
முன்னதாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சதம் விளாசினார். இது சர்வதேச போட்டியில் விராட் கோலி அடித்த 500-வது சதமாகும்.
மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் விராட் கோலி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
செல்வம்