சேமியா என்றாலே உப்புமாவும் பாயசமும் நினைவுக்கு வரும் நிலையில், திருவள்ளுவர் தினமான இன்று வீட்டிலுள்ளவர்களை மகிழ்விக்க இந்த சேமியா வடை செய்து கொடுத்து இந்த விடுமுறை தினத்தைக் கொண்டாடலாம்.
என்ன தேவை?
சேமியா – ஒரு கப்
தயிர் – முக்கால் கப்
பச்சை மிளகாய் – 2
இஞ்சி – சிறிதளவு
வெங்காயம் – ஒன்று
கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் தயிருடன் சேமியா சேர்த்து 20 முதல் 30 நிமிடங்கள் ஊறவிடவும். நன்கு ஊறியதும், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து வடை மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும். பிறகு, அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, சிறு சிறு வடைகளாகத் தட்டி சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சுவையான சேமியா வடை ரெடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…