சண்டே ஸ்பெஷல்: சமையலுக்கு ஏற்றது பெரிய வெங்காயமா? சின்ன வெங்காயமா?

டிரெண்டிங்

பெரிய வெங்காயத்தின் விலை கிலோ ரூபாய் 50-ஐ தாண்டி ஏறிக்கொண்டே இருக்க, சிறிய வெங்காயத்தின் விலை ரூ.50 என்கிற நிலையில் விற்கப்படுகிறது. இந்த நிலையில் சமையலுக்கு ஏற்றது பெரிய வெங்காயமா? சின்ன வெங்காயமா? ‘நாங்கள் வெங்காயத்தையே பயன்படுத்த மாட்டோம்’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெங்காய விலை ஏற்றத்தின்போது சொன்னதுபோல் சொல்பவர்களும் உண்டு. “ஆனால், வெங்காயத்திலுள்ள ஊட்டச்சத்துகள் பற்றியும், அவற்றால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகம் உள்ளன” என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

“சிறிய வெங்காயம், பெரிய வெங்காயம்… இரண்டுக்கும் பொதுவான குணங்கள் நிறைய உண்டு. ஆனால், பெரிய வெங்காயத்தைவிட சிறிய வெங்காயத்தில் வீரியம் அதிகம். சிறிய வெங்காயத்திலிருந்து 5 மில்லி அளவுக்கு அரைத்து எடுத்த சாற்றை, மோர் அல்லது தேனோடு கலந்து தினமும் குடித்தால், அதிகப்படியான கொழுப்பால் ஏற்படும் இதய அடைப்புப் பிரச்சினையிலிருந்து நிச்சயம் தற்காத்துக்கொள்ளலாம். இதனால்தான், பழைய சோற்றுக்குச் சிறிய வெங்காயம் என்ற காம்பினேஷன் உருவானது. இயற்கை மருத்துவத்தில் இது மிகப் பெரிய வரப்பிரசாதம் சின்ன வெங்காயம்.

இதை, தோலுரித்து தாளித்து அல்லது வேகவைத்துச் சாப்பிடுவதைவிட, சமைக்காமல் அப்படியே பச்சையாகச் சாப்பிடும்போது வெங்காயம் மிகச் சிறந்த மருத்துவப் பொருளாகச் செயல்படுகிறது. மேலும், இது ஜீரண சக்தியையும் வலுப்படுத்துகிறது. கோடைக்காலத்தில், சிறிய வெங்காயத்தை அதிக அளவில் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அளவோடு சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பல்லாரி அல்லது பெரிய வெங்காயத்தில் வீரியத்தன்மை குறைந்திருக்கும். இது, ரத்தத்தில் இருக்கக்கூடிய நச்சுகளை வெளியேற்றுவதற்கு உதவி செய்கிறது. அதிகப்படியான உணவு வகைகளைச் சாப்பிட்டாலும்கூட, இந்த வெங்காயம் சிறிதளவு சாப்பிட்டால் எளிதில் ஜீரணமடையும். பெரிய வெங்காயத்துடன், தக்காளி, கோஸ், போன்றவற்றைச் சேர்த்து சாலட்டாகச் செய்தும் சாப்பிடலாம்” என்கிறார்கள்.

மேலும், “வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நச்சுகளை அழிக்க உதவுகிறது. சமைக்காத வெங்காயத்தைச் சாப்பிடுவதால், உடலுக்கு வைட்டமின் சி கிடைக்கும். இதில் வலிமை தரும் மினரல்ஸும் ஏராளமாக இருக்கின்றன. சர்க்கரை நோய், இதயப் பிரச்னை போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களும்கூட தாராளமாகச் சாப்பிடலாம் என்பதால் உணவில் வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இலங்கை அதிபர் தேர்தல் : நள்ளிரவு முதல் முடிவுகள்!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய தலைமை நீதிபதி!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *