அனைத்து வயதினருக்கும் பிடித்த உணவாக இருப்பது ஸ்ப்ரிங் ரோல். அப்படிப்பட்ட ஸ்ப்ரிங் ரோலை வித்தியாசமாகவும், சுவையாகவும் செய்ய இந்த ரெசிப்பி உதவும்.
இறாலில் அதிக அளவு புரதமும் வைட்டமின் டி சத்தும் அடங்கியுள்ளது. இதில் கார்போஹைட்ரேட் இல்லை என்பதால், எடை குறைக்க விரும்புபவர்கள் இறாலை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
என்ன தேவை?
ரைஸ் பேப்பர் ஸ்ப்ரிங் ரோல் ரேப்பர்ஸ் (Rice paper spring roll wrappers) – 10
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
இறால் – 30 (சுத்தம் செய்து நரம்பு நீக்கவும்)
ஸ்டர் ஃப்ரை சாஸ் (Stir fry sauce) – 2 டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
வேக வைத்த பழுப்பு அரிசி சேமியா (Brown rice vermicelli) – 2 கப்
நீளமாக, மெலிதாக துருவிய கேரட் – ஒரு கப்
வெள்ளரிக்காய் – 4-5 (மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கவும்)
உப்பு – தேவைக்கேற்ப
கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெய்விட்டு சுத்தம் செய்த இறாலைச் சேர்க்கவும். இதனுடன் ஸ்டர் ஃப்ரை சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து வேகவிட்டு தனியே வைக்கவும். ஆழமான பானில் (pan) வெந்நீர் சேர்க்கவும். ஒரு ரைஸ் பேப்பர் ஸ்ப்ரிங் ரோல் ஷீட்டை எடுத்து நீரில் 10 நிமிடங்கள் நனைக்கவும்.
அதிகப்படியான நீரை உதறிவிட்டு ஒரு தட்டின் மேல் வைக்கவும். வேகவைத்த சேமியாவை பேப்பரின் கீழ்ப்பக்கம் மூன்றில் ஒரு பகுதியில் வைக்கவும். சேமியாவின் மேல் கேரட், வெள்ளரிக்காய், கொத்தமல்லி இலை வைக்கவும். பேப்பரை கவனமாக சிலிண்டர் வடிவில் பாதியளவுக்குச் சுருட்டவும்.
வேகவிட்ட 3 இறாலை மீதி பாதியில் வைத்து பேப்பரை சுருட்டத் தொடங்கவும். ஸ்ப்ரிங் ரோலுக்கு செய்வதுபோல் பக்கங்களை மூடி, இறுக்கமான சிலிண்டர் வடிவ ரோலாகச் செய்யவும். மற்ற ஷீட்டுகளிலும் இதே போல் செய்யவும். தாய் ஸ்வீட் ரெட் சில்லி சாஸுடன் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அங்க மட்டும் கூட்டம் குறையல : அப்டேட் குமாரு
பான் கார்டு 2.0 : எப்படி, எப்போது பெறுவது?
‘ஃபெங்கல்’ புயல் எங்கே கரையைக் கடக்கும்?
”விஜய்யை விமர்சித்த பிறகு சின்னப்பையன் கூட முறைக்குறான்”: போஸ் வெங்கட்