தரமான அரிசியில் மட்டுமல்ல… சேமியாவிலும் புலாவ் செய்து அசத்த இந்த ரெசிப்பி உதவும். சத்தான, சுவையான இந்த சேமியா புலாவ் அனைவருக்கும் ஏற்றது.
என்ன தேவை?
சேமியா – ஒரு கப்
உருளைக்கிழங்கு – ஒன்று
கேரட் – ஒன்று
பீன்ஸ் – 5
பச்சைப்பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை – தலா 2
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சேமியாவை வறுத்துக்கொள்ளவும். காய்கறிகளை வேகவைத்துக் கொள்ளவும். கடாயில் சிறிதளவு நெய், எண்ணெய்விட்டு சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். அதனுடன் நறுக்கிய தக்காளி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கியதும் வேக வைத்த காய்கறி களுடன் உப்பு சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொதிக்க ஆரம்பித்ததும் வறுத்த சேமியா சேர்த்து மெதுவாகக் கிளற வும். நன்கு வெந்து வாசம் வந்ததும் நெய்விட்டுக் கிளறி, நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கி சூடாகப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…