பக்கோடா செய்ய நினைப்பவர்களின் முதல் சாய்ஸ் வெங்காய பக்கோடாவாகத்தான் இருக்கும். அதற்கு பதிலாக சேமியாவில் பக்கோடா செய்து அசத்துங்கள். செய்வதும் சுலபம். வீட்டிலுள்ளவர்களின் பிடித்த பக்கோடாவாக இந்த சேமியா பக்கோடா அமையும்.
என்ன தேவை?
சேமியா – ஒரு கப்
பச்சரிசி மாவு, கடலை மாவு – தலா கால் கப்
வெங்காயம் – ஒன்று (நீளமாக நறுக்கவும்)
இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து அரைத்த விழுது – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
புதினா – சிறிதளவு
தயிர் – கால் கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சேமியாவை எண்ணெய்விட்டு வறுத்து, கைகளால் நொறுக்கி, தயிரில் அரை மணி ஊறவிடவும். ஊறியதும், அதனுடன் பச்சரிசி மாவு, கடலை மாவு, இஞ்சி – பச்சை மிளகாய் – சோம்பு விழுது, நறுக்கிய வெங்காயம், புதினா, உப்பு சேர்த்து நன்கு பிசிறிக்கொள்ளவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடானதும், பிசைந்துவைத்த மாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, உதிர் உதிராக எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
மாடுபிடி வீரர்களுக்கு உதவித்தொகை: எடப்பாடி, டிடிவி வலியுறுத்தல்!