இந்த சேமியா கட்லெட் ஒரு சுவாரஸ்யமான ஸ்நாக்ஸ் என்றே சொல்லலாம். வீட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு சுவையான சிற்றுண்டி செய்ய நினைப்பவர்களுக்கு இந்த கட்லெட் பெஸ்ட் சாய்ஸாக அமையும்.
என்ன தேவை?
சேமியா – 2 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு – ஒன்று
வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கவும்)
கொத்தமல்லி – சிறிதளவு
இஞ்சி-பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
சோள மாவு – 2 டீஸ்பூன்
மைதா மாவு – ஒரு டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
பிரெட் தூள் – சிறிதளவு
எப்படிச் செய்வது?
ஒரு கப் சேமியாவை வறுத்து தனியே வைத்துக்கொள்ளவும்.ஒரு கப் சேமியாவை சிறிதளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும். அத்துடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பையும் சேர்த்துப் பிசையவும். சோள மாவை மைதா மாவுடன் தண்ணீர் விட்டுக் கரைத்து வைக்கவும். எண்ணெயை வாணலியில் காய வைத்து, சேமியா கலவையை சிறிய உருண்டைகளாக்கி உருளை வடிவில் தட்டி, கரைத்து வைத்த மாவுக்கு கலவையில் முக்கி யெடுத்து எடுத்து வைத்த ஒரு கப் சேமியாவில் புரட்டி, எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கொடநாடு வந்தது ஏன்? – சசிகலா பேட்டி!
அரை நாள் தான் லீவா? – அப்டேட் குமாரு