மழை மற்றும் குளிர்காலத்துக்கேற்ற ஸ்நாக்ஸ் வகைகள் நிறைய உள்ளன என்றாலும் வீட்டிலேயே செய்யப்படும் ஸ்நாக்ஸ் போல வருமா? இந்த ஆனியன் புடலை ரிங்ஸ் ரெசிப்பி வீட்டில் உள்ள அனைவரையும் அசத்த உதவும்.
என்ன தேவை?
சின்ன புடலை, பெரிய வெங்காயம் – தலா ஒன்று
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கடலை மாவு – அரை கப்
பச்சரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப்ப
எப்படிச் செய்வது?
புடலையை வட்டமாக நறுக்கி விதைகளை நீக்கவும். வெங்காயத்தை வட்டமாக நறுக்கவும். ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்துக் கலந்து, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்துக்குக் கரைக்கவும். புடலை, வெங்காய ரிங்ஸை அதில் முக்கி எடுத்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். சாஸ் உடன் சாப்பிடலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: நகங்கள்… அழகுக்கு மட்டுமல்ல… ஆரோக்கியத்துக்கும் அவசியம்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!