ஆம்லெட் என்றாலே அது முட்டைதான் என்றாலும் முட்டையே சேர்க்காமலும் ஆம்லெட் செய்யலாம். இந்த நார்த் இண்டியன் வெஜ் ஆம்லெட்டை ஒருமுறை செய்து பாருங்கள். வீட்டிலுள்ளவர்கள் மீண்டும் மீண்டும் செய்ய சொல்வார்கள்.
என்ன தேவை?
கடலை மாவு – கால் கப்
ராகி மாவு – ஒரு கப்
தக்காளி – ஒன்று, (பொடியாக நறுக்கவும்)
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
மிளகு – ஒரு டீஸ்பூன்
விருப்பமான காய்கறிகள் (உருளை, கேரட், பீட்ரூட், பீன்ஸ், காலிஃப்ளவர் கலவை) – அரை கப் (பொடி யாக நறுக்கியது)
பிரெட் துண்டுகள் – 2 (ஓரம் நீக்கி உதிர்த்தது)
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
கடலை மாவு, ராகி மாவுடன் தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும். எண்ணெய் தவிர மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் இதில் சேர்த்துக் கலக்கவும். தோசைக்கல்லில் எண்ணெய் தடவி, சூடானதும் மாவை ஆம்லெட் மாதிரி ஊற்றவும். இருபுறமும் வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…