முள்ளங்கியில் சூப் செய்வதா… என்று நினைக்கலாம். ஆனால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல் செரிமானக் கோளாறுகளை சரி செய்வது, மலச்சிக்கலைத் தீர்ப்பது வரை முள்ளங்கியில் பல்வேறு நன்மைகள் உள்ளன. அப்படிப்பட்ட முள்ளங்கியில் சூப் செய்து பருக இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
வெள்ளை முள்ளங்கி – 2
மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெயில் பொரித்த பிரெட் துண்டுகள் – 5
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
முள்ளங்கியை கழுவி, தோல் சீவி நறுக்கவும். பிறகு, முள்ளங்கியை உப்பு போட்டு வேகவைத்து தண்ணீரை வடிகட்டி மசிக்கவும். வடி கட்டிய தண்ணீருடன் மசித்த முள்ளங்கி, உப்பு, மிளகுத் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து ஒருகொதிவிட்டு இறக்கி, பொரித்த பிரெட் துண்டுகளை சூப்பின் மேலாக தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
5 ஆயிரமா? 10 ஆயிரமா?: அப்டேட் குமாரு
சொருகிருவேன்…அர்ச்சனாவை மிரட்டிய நிக்சன்: இந்த வாரம் ரெட் கார்டா?