கடைகளில் விதம்விதமான டீ ரகங்களைச் சுவைத்தாலும் வீட்டிலேயே செய்யப்படும் டீக்கு நிகராகுமா? இந்த வீக் எண்ட் நாளில் சுவையான டீ ஒன்றை ருசிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த மசாலா டீ.
என்ன தேவை?
பால், தண்ணீர் – தலா ஒரு டம்ளர்
ஏலக்காய் – 2
சுக்குப்பொடி – அரை டீஸ்பூன்
துளசி இலை – 4
தோல் நீக்கி தட்டிய இஞ்சி – சிறிது
டீத்தூள் – ஒரு டீஸ்பூன்
சர்க்கரை – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
பாலைக் காய்ச்சவும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை வைத்து ஒரு கொதி வந்தவுடன் தட்டிய ஏலக்காய் மற்றும் இஞ்சி, சுக்குப்பொடி, துளசி இலை, டீத்தூள், சர்க்கரை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். தண்ணீரில் அனைத்துப் பொருட்களின் சாறும் இறங்கி மணம் வரும் சமயம் அடுப்பை அணைக்கவும். பிறகு வடிகட்டி பாலில் சேர்த்து, தேவையெனில் சிறிது சர்க்கரை கலந்து பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
2024 புத்தாண்டில் கார் வாங்கப் போகிறீர்களா? இதைக் கொஞ்சம் யோசிங்க…!