கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பலவித உடல் உபாதைகள் ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்கு முக்கிய மருந்தாகச் செயல்படும் கற்பூரவள்ளியில் சட்னி செய்து சுவைக்கலாம். இதை இட்லி, தோசையுடன் பரிமாறலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்தச் சட்னி, அனைவருக்கும் ஏற்றது;
என்ன தேவை?
கற்பூரவள்ளி இலைகள் (ஓமவள்ளி) – 15
தேங்காய்த் துருவல் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 5 (இரண்டாக நறுக்கவும்)
புளி – கோலிக்குண்டு அளவு
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்
கடுகு – கால் டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் – சிறிதளவு
எப்படிச் செய்வது?
வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளிக்கவும். உளுத்தம்பருப்பு சிவந்தவுடன் பச்சை மிளகாய், கற்பூரவள்ளி இலைகள் சேர்த்து வதக்கவும். பிறகு தேங்காய்த் துருவல், புளி, உப்பு சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்துத் தண்ணீர்விட்டுத் துவையலாக அரைத்து எடுக்கவும். சிறிதளவு எண்ணெயைத் தாளிக்கும் கரண்டியில் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியில் கலக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…