அன்றாட சமையலுக்கு முட்டைகோஸைப் பயன்படுத்தி பொரியல், கூட்டு போன்ற உணவு வகைகளைச் செய்து ருசித்திருப்போம். அதே முட்டைகோஸில் மொறுமொறுப்பான பகோடா செய்தும் அசத்தலாம். உடனடியாகச் செய்யக்கூடிய இந்த பகோடா மாலை நேரத்துக்கேற்ற சுவையான சிற்றுண்டியாக அமையும்.
என்ன தேவை?
கடலை மாவு – முக்கால் கப்
அரிசி மாவு – கால் கப்
நறுக்கிய முட்டைகோஸ் – ஒரு கப்
வெங்காயம் – 2 கப்
சோம்புத்தூள் – ஒரு டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர, மற்ற பொருட்களைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, பிசைந்துவைத்திருக்கும் கலவையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
+1
+1
+1
+1
1
+1
+1
+1