குளிருக்கு இதமாக, வயிற்றுக்கு தீங்கு விளைவிக்காத அசைவ உணவை சாப்பிட வேண்டும் நினைப்பவர்கள் இந்த தொடைக்கறிக் குழம்பு செய்து சுவைக்கலாம். சாதத்துக்கு மட்டுமல்ல… இட்லி, சப்பாத்தி, பரோட்டாவுக்கும் ஏற்ற சத்தான சைடிஷ் இது.
என்ன தேவை?
மட்டன் (தொடைக்கறி) – முக்கால் கிலோ
சின்ன வெங்காயம் – 5
தக்காளி – 2
உருளைக்கிழங்கு – 2
முருங்கைக்காய் – ஒன்று
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
வனஸ்பதி – ஒரு டீஸ்பூன்
சோம்பு – ஒரு டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
மிளகாய்த்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 3 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கறி மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மட்டனைச் சுத்தம் செய்து சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, வனஸ்பதி ஊற்றிக் காய்ந்ததும், கறிவேப்பிலை, சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து சிவக்க வறுத்து ஆறியதும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
இதே வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இத்துடன் மீடியம் சைஸில் நறுக்கிய உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் சேர்த்து வதக்கி, அரைத்த மசாலா, மல்லித்தூள் (தனியாத்தூள்), மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.
இனி, நறுக்கிய மட்டன் துண்டுகள் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும். இத்துடன் கறிமசாலாத்தூள் சேர்த்துக் கிளறி, கொத்துமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
2024 ஆரம்பமே சும்மா அதிருதடா: அப்டேட் குமாரு
மகா கவிதை புத்தக வெளியீட்டு விழா: வைரமுத்துவுக்கு ஸ்டாலின் கட்டளை!