கிச்சன் கீர்த்தனா : சத்து மாவு ஹெர்பல் கொழுக்கட்டை!

Published On:

| By Kavi

nutrient flour herbal porridge

வீக் எண்ட் நாளில் விதம்விதமான உணவை விரும்புவர்களுக்கு சத்தான உணவை ஒதுக்குவார்களா என்ன? தற்போது நிலவும் சூழ்நிலைக்கேற்ப சூடான சத்து மாவு  ஹெர்பல் கொழுக்கட்டை செய்து வீக் எண்டை ஹெல்த்தியாகக் கொண்டாடுங்கள்.

என்ன தேவை?

வறுத்த சத்து மாவு – ஒரு கப்
மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்
ஓமம் – அரை டீஸ்பூன்
புதினா இலைகள் – 10
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – தேவையான அளவு (பொடியாக நறுக்கவும்)
தேங்காய்த் துருவல் – அரை கப்
தோல் சீவிய இஞ்சி – ஒரு துண்டு
நெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தாளிக்க…
கடுகு, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

அடிகனமான பாத்திரத்தில் ஒன்றரை கப் தண்ணீரைக் கொதிக்கவிடவும். இதனுடன் மிளகு, இஞ்சி, சீரகம், ஓமம், புதினா, கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும். தண்ணீர் கொதித்து, பாதியாகக் குறையும்போது இறக்கி வடித்துச் சூடாக இருக்கும்போதே சத்து மாவு, தேங்காய்த் துருவல், நெய் சேர்த்துக் கட்டிதட்டாமல் கிளறவும் (தேவைப்பட்டால் சிறிதளவு சுடுநீர் சேர்க்கலாம்). ஆறியதும் மாவைக் கொழுக்கட்டைகளாகப் பிடித்து ஆவியில் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, கொழுக்கட்டைகள் மீது சேர்த்து அலங்கரித்துப் பரிமாறவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

டாப் 10 செய்திகள் : தலைமை செயலாளர்களின் தேசிய மாநாடு முதல் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை வரை!

டிஜிட்டல் திண்ணை: அதிமுக பொதுக்குழுவுக்கு ரெட் அலர்ட்?

பாவம் அவரே கன்ஃபியூஸ் ஆகிட்டாரு …. அப்டேட் குமாரு

அல்லு அர்ஜூன் கைது: வெளியான முக்கிய கடிதம்!

இப்போது மட்டும் வந்த ‘தெலுங்கு’… குகேஷ் பற்றி சந்திரபாபு, பவன் கல்யாண் பதிவு!

அந்நிய நேரடி முதலீடு அசத்தும் இந்தியா: என்ன காரணம்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share