புத்தாண்டு தினத்தன்று மனத்துக்கு மட்டுமல்ல… வயிற்றுக்கும் உற்சாகமளிக்கும் விதமாக சாப்பிட நினைப்பார்கள் பலர். அவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த மட்டன் முருங்கைக்கீரைச் சாறு. புத்தாண்டு கொண்டாட்டத்தின் நள்ளிரவில் வயிறு முட்ட தின்றவர்களுக்கு அருமருந்தாக அமையும் இந்தச் சாறு.
என்ன தேவை?
எலும்புள்ள மட்டன் துண்டுகள் – 150 கிராம்
முருங்கைக் கீரை – ஒரு கைப்பிடி அளவு
கேரட் – ஒன்று
தக்காளி – 2
பிரிஞ்சி இலை – ஒன்று
மிளகுத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்றில் பாதி
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 6 பல்
மல்லித்தூள் (தனியாத்தூள் ) – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
தண்ணீர், உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
மட்டனைச் சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்கி, சுத்தம் செய்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, பிரிஞ்சி இலை, சேர்த்து நிறம் மாற வதக்கி, முருங்கைக் கீரையைச் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் மீடியம் சைஸில் நறுக்கிய கேரட், தக்காளி சேர்த்து வதக்கவும். இதில், சீரகத்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கி, தண்ணீர் ஊற்றி மட்டன் துண்டுகளைச் சேர்த்து வேகவிடவும். மட்டன் வெந்ததும் கொத்தமல்லித்தழைத் தூவிப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
புத்தாண்டு பார்ட்டி பஸ்: அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: அமைச்சர்கள் தப்பிப்பார்களா? ஸ்டாலின் நடத்திய பதட்ட ஆலோசனை!
—