ரத்த அழுத்தம், இதயக் கோளாறு, உடல் பருமன் போன்ற பிரச்சினை உள்ளவர்கள் உப்பு, எண்ணெய் போன்றவற்றைத் தவிர்க்க மருத்துவர்கள் அறிவுறுத்துவர். அப்படியானால் ஊறுகாய் வகைகள் அனைத்தையுமே அவர்கள் தவிர்க்க வேண்டியிருக்கும். ஆனால், மாகாளிக்கிழங்கு ஊறுகாயை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். உப்பை அறவே தவிர்க்க வேண்டுமென நினைப்பவர்கள், ஊறுகாய் தயாரிக்க இந்துப்பைப் பயன்படுத்தலாம். உடல் சூட்டைக் குறைக்க உதவும்; பசியை அதிகரிக்கும்; செரிமானப் பிரச்சினைகளைச் சரி செய்ய உதவும், இந்த மாகாளிக்கிழங்கு ஊறுகாய்.
என்ன தேவை?
மாகாளிக்கிழங்கு – 300 கிராம்
எலுமிச்சைப்பழம் – ஒன்று (சாறு பிழிந்து, விதைகளை நீக்கவும்)
கடுகு, மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 6
கடைந்த தயிர் – 125 மில்லி (அரை கப்)
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மாகாளிக்கிழங்கை மண்போக கழுவி, 12 மணி நேரம் (இரவு முழுவதும்) ஊறவைக்கவும். மறுநாள் தோல் சீவி, நடுவில் உள்ள தடிமனான வேரை நீக்கி, சிறிய துண்டுகளாக்கவும். கடுகுடன் காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்தெடுக்கவும். பெரிய பாத்திரத்தில் மாகாளிக்கிழங்கு, அரைத்த பொடி, தயிர், எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்கு கலக்கவும். நன்றாக ஊறியதும் தயிர் சாதத்துடன் பரிமாறவும். இது நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
திமுகவை ஆதரிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை : மோடி
“பாமக 10 தொகுதிகளில் போட்டி”: அன்புமணி, அண்ணாமலை கூட்டாக பேட்டி!