இன்ஸ்டாகிராம் பிரபலம் கிளி பால் தனது தங்கையுடன் ஷாருக்கான் பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் கிளி பால் பாலிவுட் பாடல்களுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிடுவார். இந்த வீடியோக்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறும்.
அந்தவகையில் சமீபத்தில் அவர் தனது தங்கையுடன் ஷாருக்கானின் ஹே மேரா தில் பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
இந்த வீடியோவில் கிளி பால் குர்தா உடையுடனும் அவரது தங்கை லெஹங்கா சோளி உடையுடனும் ஹே மேரா தில் பாடலுக்கு நடனமாடினர். இந்த ரீல்ஸ் வீடியோவை இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.
பலரும் இந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். Fitnessempire என்ற இன்ஸ்டாகிராம் பயனர் நீங்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்துவிடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஹே மேரா தில் பாடல் ஜோஷ் படத்தில் இடம்பெற்றது. இந்த படத்தில் ஷாருக்கான், பிரியா கில், ஷரத் கபூர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
செல்வம்
ரஜினி பேசிய விதம்…வருண் சக்கரவர்த்தி ட்விட்!
கர்நாடகா அடுத்த முதல்வர் யார்?: ராகுல் – கார்கே ஆலோசனை!