ரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்க்கும் கிழங்கான் மீன்களைக் குழம்பு வைத்து மட்டுமல்ல… வறுவல் செய்தும் ருசிக்கலாம். அதற்கு இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
கிழங்கான் மீன் – ஒரு கிலோ
எலுமிச்சைப்பழம் – 3
மீன் மசாலா (கடைகளில் கிடைக்கும்) – தேவையான அளவு
இஞ்சி, பூண்டு – தலா 150 கிராம் (விழுதாக அரைக்கவும்)
எண்ணெய் – ஒரு லிட்டர்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கிழங்கா மீனில் மீன் மசாலாவைப் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி இஞ்சி – பூண்டு விழுது, உப்பு சேர்க்கவும். எலுமிச்சைப்பழத்தைப் பிழிந்து மீன் மேலே ஊற்றவும். அரை மணி நேரம் மீனை அப்படியே பாத்திரத்தில் ஊறவைக்கவும். பின்னர் எண்ணெயில் வறுத்தெடுத்தால் கிழங்கா வறுவல் ரெடி.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: கானங்கத்த மீன் புட்டு