குஷ்பு நீங்க எந்த ஷாம்பு யூஸ் பண்றீங்க? – நீதிபதி கேட்ட கேள்வி!

Published On:

| By Kalai

நடிகை குஷ்பூவிடம் நீங்கள் எந்த ஷாம்பு பயன்படுத்துகிறீர்கள் என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளது நெட்டிசன்கள் பார்வையை ஈர்த்துள்ளது.

உச்சநீதிமன்ற முன்னால் நீதிபதியும் , இந்திய வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவருமான மார்கண்டேய கட்ஜு பணி ஓய்வுக்கு பிறகு சமூக வலைதளங்கள் மூலம் அடிக்கடி அதிரடியான கருத்துகளை பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டவர்.

அதிலும் தமிழகத்தில் ஜெயலலிதா இறந்த சம்பவம், ஜல்லிக்கட்டு பிரச்சினை, ரஜினிகாந்த் விவகாரம் என பல கருத்துகளை வெளிப்படையாக தெரிவித்தவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜு.

கடந்த 2015ம் ஆண்டு டெல்லி தேர்தலில் கிரண் பேடிக்கு பதிலாக ஷாஜியா இல்மியை வேட்பாளராக நிறுத்தி இருந்தால் பாஜக வெற்றி பெற்று இருக்கும். காரணம் கிரண் பேடியை விட ஷாஜியா இல்மி அழகானவர் என கூறியது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது.

இதற்கு பின்னர் சமூக வலைதளங்கள் பக்கம் வராத கட்ஜு சமீப காலமாக மீண்டும் சமூக வலைதளங்களில் அதிக கவனம் ஈர்க்க தொடங்கியுள்ளார்.

நடிகையும் , அரசியல் பிரமுகரான குஷ்பூ “வலியை குணப்படுத்த சிறந்த மருந்து சிரிப்பு” என ட்விட்டரில் நீளமான கூந்தலுடன் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

இதைப் பார்த்த பலரும் குஷ்பூ இன்னும் இளமையாக இருக்கிறீர்கள், அழகாக இருக்கிறீர்கள் என பல்வேறு கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த ட்விட்டர் பதிவில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்கண்டேய கட்ஜூ, குஷ்பூ நீங்கள் எந்த ஷாம்பு பயன்படுத்துகிறீர்கள் என கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.

கலை.ரா

புத்தாண்டுக்கு காவல்துறை போட்டிருக்கும் மாஸ்டர் பிளான்!

விமானத்தில் மதுபோதையில் தாக்குதலா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel