நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது மாமியாருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியை சந்தித்துள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் 16 வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் எம்.எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வி என்று புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தில் இருக்கிறது.
இதனிடையே தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு தனது மாமியாருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியை சந்தித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று(ஏப்ரல் 14) வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”ஹீரோக்கள் உருவாக்கப்படுவதில்லை, அவர்கள் பிறக்கிறார்கள், அதை தோனி நிரூபித்துள்ளார்.
தோனியை என் மாமியாரை சந்தித்தார். தோனியின் அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலில் என் மாமியார் இருக்கும் புகைப்படம் தான் இது.
88 வயதில் ஹீரோ தோனியை அவர் வணங்குகிறார். தோனி நீங்கள் பல வருடங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும். அதற்காக நான் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
மேலும், இதை சாத்தியப்படுத்திய சிஎஸ்கே அணிக்கு ஒரு விசில் போடு என்று பதிவு செய்துள்ளார். குஷ்புவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
சிறுபான்மையினரின் நலனுக்காக திராவிட மாடல் தொடர்ந்து செயல்படும்: முதல்வர்
விஜய் போட்ட உத்தரவு: அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய நிர்வாகிகள்!