காரில் சாய்ந்திருந்த ஆறு வயது சிறுவனை எட்டி உதைத்த கேரளாவைச் சேர்ந்த நபரை போலீஸ் கைது செய்தது.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலைச்சேரியில் இஷாத் என்பவர் நேற்று (நவம்பர் 3) இரவு குடும்பத்தோடு சென்றார்.
அப்போது தனது காரை சாலை ஓரத்தில் நிறுத்தி சென்றார். திரும்பி வந்தபோது கார் மீது 6 வயது சிறுவன் சாய்ந்து நின்றிருப்பதை பார்த்து ஆத்திரமடைந்த அவர் அந்த சிறுவனின் இடுப்பு மீது எட்டி உதைத்துள்ளார்.
ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த அந்த சிறுவன் நடப்பது என்னவென்று தெரியாமல் அப்பாவித்தனமாக அங்கிருந்து நகர்ந்து செல்கிறான்.
இதை பார்த்த பொதுமக்கள் காரின் உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரவு 8:30 மணியளவில் நடந்த இந்த சம்பவம் குறித்து நேரில் கண்ட இளம் வழக்கறிஞர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து சிறுவனை எட்டி உதைத்த அந்த நபரை ஷிஹ்ஷாத் காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்தனர்.
ஆனால் அவர் உடனடியாக விடுவிக்கப்பட்டார், இது உள்ளூர் மக்களை கோபப்படுத்தியது.
இந்த சிசிடிவி காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, விரைவில் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவைத் தலைவரும், தலச்சேரி எம்எல்ஏவுமான ஏஎன் ஷம்சீர் தெரிவித்தார்.
அதன்படி இஷாத்தை இன்று காலை (நவம்பர் 4) போலீசார் கைது செய்தனர்.
கலை.ரா
திமுக நிர்வாகி மீது தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பூ புகார்!
ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார்: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!