ஒரே இரவில் கோடீஸ்வரர்களான கேரளாவின் 11 தூய்மை பணியாளர்கள்!
கேரளாவில் 25 ரூபாய்க்கு வாங்கிய லாட்டரிக்கு 10 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ளதை அடுத்து 11 தூய்மை பணியாளர்கள் ஒரே இரவில் கோடீஸ்வரராக மாறியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் மழைக்கால பம்பர் பரிசு லாட்டரி சீட்டு விற்பனையை ஜுன், ஜூலை மாதங்களில் கேரள லாட்டரித் துறை நடத்தும்.
அதன்படி கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் பரப்பனங்காடி பேரூராட்சிக்குட்பட்ட பசுமைப் படையான ஹரித கர்ம சேனாவை சேர்ந்த 11 தூய்மை பணியாளர்கள் சேர்ந்து 250 ரூபாய்க்கு ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினர்.
இதனையடுத்து நேற்று (ஜூலை 28) நடைபெற்ற குலுக்கலில், பரப்பனங்காடியைச் சேர்ந்த 11 தூய்மை பணியாளர்கள் கேரள லாட்டரித் துறையால் ரூ.10 கோடிக்கான மழைக்கால பம்பர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்த லாட்டரி டிக்கெட்டுக்கு 10 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது. இதனை அடுத்து அந்த பணத்தை 11 பேரும் சமமாக பிரித்துக் கொண்டனர்.இதன் மூலம் நேற்று வரை ஏழ்மை நிலையிலிருந்த தூய்மை பணியாளர்கள் இன்று கிட்டத்தட்ட கோடீஸ்வரர்கள் ஆகியுள்ளனர்,
இதுகுறித்து பரிசு வென்ற 11 பேரில் ஒருவரான ராதா கூறுகையில், “அனைவரும் சேர்ந்து பணம் போட்டு ஒரு லாட்டரி சீட்டு வாங்கினோம். ஆனால் நாங்கள் பரிசை வெல்வோம் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. 10 கோடி வென்றுள்ளோம் என்று அறிந்ததும் உற்சாகத்திற்கும் மகிழ்ச்சிக்கும் எல்லையே இல்லை.
நாங்கள் அனைவரும் வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளோம். அவற்றை தீர்க்க இந்த பணம் ஓரளவுக்கு நிவாரணமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ராமேஸ்வரம் வரும் அமித்ஷா: அதிரடி உத்தரவிட்ட மின் வாரியம்!
கொடநாடு வழக்கு இடைக்கால அறிக்கை: சிபிசிஐடிக்கு நீதிபதி கேள்வி!