Keerthy Shetty getting wet in the rain

மழையில் நனையும் கீர்த்தி ஷெட்டி: வைரல் புகைப்படம்!

டிரெண்டிங்

நடிகை கீர்த்தி ஷெட்டியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் கீர்த்தி ஷெட்டி. கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான ‘உப்பென்னா’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இந்த படத்திற்கு பிறகு ‘வணங்கான்’ படத்தில் சூர்யா ஜோடியாக நடிக்கவிருந்தார். ஆனால் கால்ஷீட் பிரச்சனையால் அப்படத்திலிருந்து விலகிவிட்டார்.

தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர்களின்  திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் வெளியான ‘தி வாரியர்’ படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

அதன்பிறகு  நாகசைதன்யாவின்  ‘கஸ்டடி’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். தமிழில் ஜெயம் ரவியின் ‘ஜீனி’ படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதவிர விஷால் படம் ஒன்றிலும் நடிக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில் மழை சாரலில் நனைந்தபடி இருக்கும் புகைப்படங்களை கீர்த்தி ஷெட்டி வெளியிட்டுள்ளார்.

 

Keerthy Shetty getting wet in the rain

 

Keerthy Shetty getting wet in the rain

 

Keerthy Shetty getting wet in the rain

மு.வா.ஜெகதீஸ் குமார்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

கிச்சன் கீர்த்தனா: நவதானிய கட்லெட்

+1
1
+1
3
+1
0
+1
2
+1
6
+1
1
+1
3