|

ஒடிசா விபத்து: கவாச் சிஸ்டம் என்னாச்சு?

நாட்டையே உலுக்கியுள்ள ஒடிசா ரயில் விபத்து நடந்த வழித்தடத்தில் கவாச் பாதுகாப்பு அமைப்பு இல்லை என்று ரயில்வே கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 2) மூன்று ரயில்கள் மோதியதில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 288ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது இந்த விபத்து குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்தும் என்று கூறினார்.

இதனையடுத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதுவதை தடுக்கும் வகையில் ரயில்களில் அறிவிக்கப்பட்ட கவாச் அமைப்பு ஏன் நேற்று செயல்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதற்கிடையே ‘கவாச்’ அமைப்பு ஒடிசா வழித்தடத்தில் இன்னும் செயல்படுத்தபடவில்லை என்பதை ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் சர்மா இன்று உறுதிப்படுத்தினார்.

கவாச் என்றால் என்ன?

கவாச் சிஸ்டம் என்பது  ரயில் ஒரு சிக்னலைத் தாண்டும்போது ரயில்வே ஓட்டுநருக்கு எச்சரிக்கை செய்து, அதே பாதையில் மற்றொரு ரயில் வந்தால் 380 மீட்டருக்கு முன்னதாக தானாகவே ரயிலை நிறுத்தும் பிரேக்குகளைக் கட்டுப்படுத்தும் அமைப்பு ஆகும்.

ஆத்மநிர்பர் பாரத் முயற்சியின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு மார்ச் 4 ஆம் தேதி கவாச் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முன்னிலையில் சோதிக்கப்பட்டு அறிமுகப்படுத்தபட்டது. இதனை அவரும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்த தொழில்நுட்பத்தின் கீழ் மொத்தம் 2,000 கி.மீ ரயில் வழித்தடங்கள் கொண்டு வரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தென்னிந்தியாவில் இருந்து கிழக்கிந்தியா வரை செல்லும் முக்கியமான ரயில் பாதையான கொரமண்டல் எக்ஸ்பிரஸ் வந்த ஒடிசா வழித்தடத்தில் கவாச் அமைப்பு இல்லை என்று ரயில்வே கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

மூன்று ரயில்கள்… மூன்று தடங்கள்: கொடூர விபத்து நடந்தது எப்படி?

உயர் மட்டக் கூட்டம்: ஒடிசா விரையும் பிரதமர் மோடி

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts