கடந்த ஆண்டு ஜப்பானில் பிறப்பு விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்த விகிதத்தை அதிகரிக்கக் குழந்தை பிறக்கையில் வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் தொகையை அதிகரிக்கும் புதிய திட்டத்தை அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
ஏற்கெனவே ‘Childbirth and Childcare Lump-Sum Grant’ என்ற பெயரில் புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஜப்பான் அரசு 2,52,338 ரூபாயை (420,000 யென்) இன்ஷூரன்ஸ் தொகையாக வழங்கி வருகிறது.
இந்த நிலையில் இந்தத் தொகையை 3,00,402 ரூபாய் (500,000 யென்) வரை உயர்த்த இப்போது திட்டமிட்டுள்ளது.
அதாவது 48,000 ரூபாயை உயர்த்தி வழங்க ஏற்பாடு செய்துள்ளது. இதனால் மக்களிடையே குழந்தை பிறப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து ஜப்பான் நாட்டின் சுகாதார மற்றும் நலத்துறை அமைச்சர் கட்சுனோபு காடோ, ஜப்பானின் பிரதம மந்திரி ஃப்யூமியோ கிசிடாவிடம் கடந்த வாரம் பேசியுள்ளார்.
இந்த ஊக்கத்தொகை அதிகரிப்புக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், வரும் நிதியாண்டில் இது நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜப்பானில் 8,11,604 பிறப்புகளும், 14,39,809 இறப்புகளும் பதிவாகி உள்ளன. இதன் விளைவாக மக்கள்தொகை எண்ணிக்கை 6,28,205 வரை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-ராஜ்
உலகக்கோப்பை கால்பந்து: நாமக்கல்லில் இருந்து கத்தாருக்கு 2.20 கோடி முட்டைகள் ஏற்றுமதி!