திமுக தொண்டரின் வீட்டில் 16 அடி உயர கலைஞரின் பேனா!

டிரெண்டிங்

சென்னை ஆதம்பாக்த்தைச் சேர்ந்த திமுக தொண்டர் தான் கட்டிய புதிய வீட்டில் கருணாநிதியின் நினைவை போற்றும் வகையில் அமைத்துள்ள 16 அடி உயரத்தில் பைபர் மற்றும் சில்வர் கலந்த பேனா பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு அருகே கடலில் ரூ.81 கோடி செலவில் 42 மீட்டர் உயரத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் இருந்து 360 மீட்டர் தொலைவில் நடுக்கடலில் பேனா சிலை வைக்க அரசு திட்டமிட்டிருக்கிறது. இதுதொடர்பாக சமீபத்தில் பொதுப்பணித்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டன.

இந்த நிலையில், சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் பிரபாகரன் கலைஞரின் நினைவை போற்றும் வகையில் பைபர் மற்றும் சில்வர் கலந்த பேனாவை தான் கட்டியுள்ள புது இல்லத்தின் முகப்பு சுவற்றில் நிறுவியுள்ளார்.

16 அடி நீளம் கொண்ட பேனா சின்னத்துடன் ”உந்தன் விரல்களில் ஒன்றாய் திகழ்ந்த எழுதுகோலாய் மாறிட ஆசை” என்ற வாசகத்தையும் கருணாநிதி படம் பொறிக்கப்பட்ட பெயர் பலகையில் அச்சிட்டு பொருத்தியுள்ளார் பிரபாகரன்.

கடலில் கருணாநிதியின் பேனா சின்னம் அமைக்க ஒருபுறம் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது. இந்நிலையில் திமுக விசுவாசியும், சாய்பாபா பக்தருமான பிரபாகரன் அமைத்துள்ள கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் இப்போது சமூகவலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

கல்வீச்சு – கண்ணீர் புகை – தடியடி : கலவர பூமியாய் மாறிய எருதுவிடும் விழா!

ஏ.ஆர்.ரகுமான், ஜி.வி.பிரகாஷ் மனு தள்ளுபடி!

+1
0
+1
0
+1
0
+1
7
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.