ஆவியில் வேகவைத்த இடியாப்பம் அனைத்து வயதினருக்குமான ஆரோக்கிய உணவு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த வார வீக் எண்டுக்கு கம்பு இடியாப்பம் செய்து சூப்பராக என்ஜாய் செய்ய இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
கம்பு மாவு – ஒரு கப்
அரிசி மாவு – அரை கப்
தண்ணீர் – ஒரு கப்
நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கம்பு மாவு மாவை வாசம் வரும் வரை வறுத்துக்கொள்ளவும். தீயை அணைத்து விட்டு அதனுடன் அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். ஒரு கப் தண்ணீரை சூடாக்கி கைபொறுக்கும் சூட்டில் மாவில் ஊற்றி நன்கு பிசையவும். பிறகு, 10 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும். மீண்டும் கை பொறுக்கும் சூட்டில் பிறகு சிறிது நல்லெண்ணெய் விட்டு மாவைப் பிசையவும். பிசைந்ததை இடியாப்ப அச்சில் சேர்த்து இட்லித் தட்டில் பிழிந்து, ஆவியில் 10 நிமிடங்கள் மீண்டும் வேகவைத்து எடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : சிவப்பு அரிசி இடியாப்பம்!
கிச்சன் கீர்த்தனா : கேரட் மில்க் ஷேக்!
எத்தனை நம்பர் 1 ஸ்டேட்? அப்டேட் குமாரு
IPL 2024: இது நடந்தால் சிஎஸ்கே 2வது இடத்திற்கு செல்லுமா? எப்படி?