KamalHaasan RoboShankar viral video

கட்டிங் எல்லாம் இனிமேல் வேண்டாம்…ரோபோ சங்கரிடம் உடல் நலம் விசாரித்த கமல்

டிரெண்டிங்

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நடிகர் ரோபோ சங்கரிடம் நடிகர் கமல்ஹாசன் உடல் நலம் விசாரித்துள்ளார்.

சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் தன்னுடைய நகைச்சுவையால் மக்களை மகிழ்விக்கும் ரோபோ சங்கர், விஜய் தொலைக்காட்சியில் வெளியான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர்.

அண்மையில் இவர் உடல் மெலிந்த தோற்றத்தில் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே அவருடைய உடல் நலத்திற்கு என்ன ஆனது என்ற கேள்வியும் எழுந்தது.

இச்சூழலில், Behind Talkies யூ டியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ”நான் ஆரம்பத்துல உடம்பு குறைக்கிறதுக்காகத்தான் டயட்ல இருந்தேன். ஆனா அந்த நேரத்துல எனக்கு எல்லாருக்கும் வருவது போல ஒரு நோய் வந்துச்சு, அது மஞ்சள் காமாலை தான். அதனால வேகமா உடம்பு குறைய ஆரம்பித்து விட்டது. ஆனால் நான் இப்போது உடம்பு சரியாகி மீண்டு வந்து விட்டேன்” என்று கூறியிருந்தார்.

தற்போது உடல் நலம் தேறியுள்ள ரோபோ சங்கர் ஒரு சில நிகழ்ச்சிகளிலும், படப்பிடிப்புகளிலும் கலந்துகொண்டு நடித்து வருகிறார்.

இந்நிலையில், ரோபோ சங்கரை தொலைபேசி மூலம் அழைத்து நடிகர் கமல்ஹாசன் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். மேலும், அவருக்கு அறிவுரையும் வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், உடல்நிலையை சரியாக பார்த்து கொள்ளுங்கள் என கமல் சொல்ல உடனே ரோபோ சங்கர், எல்லாத்தையும் மனைவி தான் பார்த்துக் கொள்கிறார்.

ஓய்வு, மருந்து எல்லாமே கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். என் ஆண்டவர் புண்ணியத்தில் எனக்கு எப்போதும் எதுவும் நடக்காது என்றார்.

மேலும், கட்டிங் எல்லாம் இனிமேல் வேண்டாம் என கமல் கூற, இனிமே கட்டிங் எல்லாம் ஒன்றும் கிடையாது சார். அப்படியே இருந்தா கூட வீட்ல இருக்கிறவங்களையும் கூட்டிட்டு தான் போகணும் போல என்று காமெடியாக ரோபோ சங்கரும் பதிலளித்தார்.

தொடர்ந்து, “என் மகளுக்கு இன்னும் ஒரு 6 மாதங்களில் திருமணம் நடக்க உள்ளது. உங்களின் ஆசீர்வாத்துடன் தான் அந்த திருமணம் நடக்க வேண்டும்.

அது நடந்தால் என் பிறவி பலன் அடைந்துவிடுவேன். உங்களை கேட்காமல் திருமண தேதியை முடிவு செய்ய மாட்டேன்” என்றார் ரோபோ சங்கர்.

பின்னர், அவரின் மனைவியிடம் பேசிய கமல் ரோபோ சங்கரை பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

காமராஜர் 121வது பிறந்தநாள் விழா கோலாகலம்: தலைவர்கள் மரியாதை!

மாவீரன் முதல் நாள் வசூல் எவ்வளவு?

யார் அந்த எதிரணி: அண்ணாமலையா? திமுகவா? வானதி சீனிவாசன் பதில்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *