44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான துவக்கவிழா இன்று (ஜூலை 28) நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் செஸ்போர்டு தீமில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை மக்கள் மத்தியில் எடுத்து செல்லும் வகையில் தமிழக அரசு பல்வேறு விதமான விளம்பர நடவடிக்கைகளை மேற்கொண்டது. தமிழ்நாடு அரசின் ஏற்பாடுகள் சர்வதேச செஸ் வீரர்களை பெரும் அளவில் கவர்ந்துள்ள நிலையில் இதற்கான முழு ஏற்பாட்டையும் செய்த அரசை பாராட்டி ட்வீட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான பிரமாண்ட துவக்கவிழா இன்று (ஜூலை 28) கோலாகலமாக நடைபெறவுள்ள நிலையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி நினைவிடம் செஸ்போர்டு தீமில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரியாரின் ஓவியம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் சென்னை மாநகரத்தின் பல்வேறு சுவர்களும் ஓவியத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
- க.சீனிவாசன்