ஹெல்த் டிப்ஸ்: கடுக்காய் பொடி சாப்பிட்டால் முதுமைத்தோற்றம் விலகுமா..?

Published On:

| By Kavi

kadukkai powder benefits for skin minnambalam health tips

கடுக்காய் எடுத்துக்கொண்டால் `கிழவனும் குமரன் ஆகலாம்’ என்றும் சொல்லப்படுவதுண்டு. தொடர்ந்து சிறு வயதிலிருந்தே கடுக்காய் எடுத்து வருபவர்களுக்கு முதுமை தள்ளிப்போவதாக ஒரு நம்பிக்கை உண்டு.

அது உண்மையா… மற்ற வயதினர் எந்தளவு கடுக்காய் எடுத்துக்கொள்ளலாம்?

“கடுக்காய்க்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு. அதில் நிறைய ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் இருக்கின்றன. அதனால் இதை ஒரு காயகற்ப மருந்தாக சித்த மருத்துவத்தில் பல்லாண்டுக் காலமாகப் பயன்படுத்துகிறார்கள்.

திரிபலா சூரணத்தில் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என மூன்றும் சேர்க்கப்பட்டிருக்கும். இதுவும் ஒரு காயகற்ப மருந்துதான். மலத்தை இளகச் செய்து, உடல் கழிவுகளை நீக்கும் தன்மை கொண்டது கடுக்காய்.

உணவு முறையில் துவர்ப்புச் சுவைக்கென பெரும்பாலும் நாம் எதையும் எடுத்துக்கொள்வதில்லை. வாழைப்பூவில் துவர்ப்புச்சுவை உண்டு. அதை மட்டும் எப்போதாவது எடுத்துக்கொள்கிறோம்.

அந்த வகையில் கடுக்காயைச் சேர்த்துக்கொள்வதன் மூலம் துவர்ப்புச்சுவை நம் உடலில் சேரும்.

கடுக்காய்க்கு நரை, திரை, மூப்பு போக்கும் தன்மை உண்டு என்றும் சொல்லப்படுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ், கூந்தல் நரைக்காமல் மெலனின் நிறமிகளைப் பாதுகாக்கக் கூடியவை. சருமத்தில் சுருக்கங்கள் வராமலும், முதுமையடையாமலும் காக்கக்கூடியதும்கூட.

கடுக்காயை மருந்தாகவே பயன்படுத்த வேண்டும். 48 நாள்கள் எடுத்துக்கொண்டு ஓர் இடைவெளி விட வேண்டும். தொடர்ந்து சாப்பிடக் கூடாது.

கடுக்காய் சாப்பிட்டால்தான் மலம் கழிக்க முடியும் என்ற நிலையில் சிலர் இருப்பார்கள். அது தவறு. வயதானவர்கள் கடுக்காயை தினமும் சாப்பிடலாம்

காலை சுக்கு, மதியம் இஞ்சி, இரவு கடுக்காய் சாப்பிடுவது சரியான ஃபார்முலா. சுக்கை காபியாக எடுத்துக்கொள்ளலாம். இஞ்சியை துவையலாக, சட்னியாக எடுத்துக்கொள்ளலாம்.  கடுக்காயை நேரடியாக கடுக்காய் சூரணமாகவோ, திரிபலா சூரணமாகவோ எடுத்துக்கொண்டால் நல்ல பலன்களைத் தரும்” என்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஒரு மகன் போனாலும் ஆயிரம் மகன்கள் மகள்கள் இருக்கிறார்கள் : சைதை துரைசாமி உருக்கம்!

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

வெற்றியின் உடலுக்கு ஆளுநர், முதல்வர் நேரில் அஞ்சலி!

ஆளுநர் உரையில ஆளுநர் தேவையா? அப்டேட் குமாரு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share