பிரபல தொலைத்தொடா்பு நிறுவனமான ஜியோ 4ஜி சேவையில் இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக 5ஜி ஸ்மாா்ட் போன் சேவையில் களமிறங்கப் போவதாக தெரிய வந்துள்ளது.
இந்தநிலையில் உலகின் முன்னணி சிப்செட் தயாரிக்கும் நிறுவனமான குவால்காம் உடன் இணைந்து, ஜியோ குவால்காம் 5ஜி ஸ்மாா்ட் போனை தயாரிப்பதற்கான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த 5ஜி ஸ்மாா்ட் போனை தயாரிப்பதற்கு முதற்கட்டமாக Original Equipment Makers (OEMS) தயாரிப்புக்கான பணியில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மற்ற நிறுவனங்களின் 5ஜி ஸ்மாா்ட் போன்களைவிட குறைந்த விலையில் ஜியோவின் ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வர உள்ளது.
மற்ற ப்ராண்ட்களில் ரூ.10,000 விலையிலேயே ஸ்மாா்ட் போன்கள் கிடைக்கின்றன ஆனால் அவை 4ஜி போன்கள். ஜியோ மற்றும் குவால்காம் நிறுவனம் இணைந்து தயாரிக்கும், இந்த 5ஜி ஸ்மாா்ட் போனானது ரூ.8000 விலையில் விற்பனைக்கு வர உள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த ஸ்மாா்ட் போன் மற்ற ப்ராண்டுகளை விட குறைவான விலையில் வருவதற்கு முக்கிய காரணம் நான்கு ஆண்டெனாக்களுக்கு பதிலாக இரண்டு ஆண்டெனாக்களை பொருத்துவதால் குறையும் தயாரிப்பு செலவே ஆகும்.
வாடிக்கையாளா்களின் விருப்பத்திற்கு ஏற்ப குறைந்த விலையில் 5ஜி போன் கிடைக்கும் என்பதால், ஜியோ – குவால்காமின் கூட்டு முயற்சி வெற்றியடைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
ஜியோ தன்னுடைய சேவையினை தொடங்கி 9 ஆண்டுகள் ஆகிறது. அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து இன்றுவரை ஜியோவின் மவுசு சற்றும் குறையவில்லை.
இன்றுவரை தங்களுக்கான வாடிக்கையாளா்களை தக்கவைத்துக்கொள்ள, அந்நிறுவனம் பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் ஜியோ – குவால்காமின் இந்த குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட் போனும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
-பவித்ரா பலராமன்
’இயக்குநர் பாலா அடித்தாரா?’ : மமிதா பைஜூ மீண்டும் விளக்கம்!
வர்த்தக சிலிண்டர் விலை உயர்ந்தது!
முதல் வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு? மோடி- அமித் ஷா நள்ளிரவு ஆலோசனை!