மொபைல் ரீசார்ஜ் கட்டணத்தை ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் உயர்த்தியுள்ளது.
5ஜி பயனர்களுக்கு புதிய அன்லிமிட்டட் ப்ளான்களை வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம். இந்த கட்டண உயர்வு வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளது.
சுமார் 12 சதவிகிதம் முதல் 25 சதவிகிதம் வரை கட்டணத்தை உயர்த்துவதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
2ஜிபி டேட்டாவுடன் 28 நாள் வேலிடிட்டி வழங்கும் ரூ.155 ப்ளான் ரூ.189ஆகவும்
தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.209 ப்ளான் ரூ.249 ஆகவும்,
தினமும் 1 .5 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.239 ப்ளான் ரூ.299 ஆகவும்,
தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.299 ப்ளான் ரூ.349ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
தினமும் 2 .5 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.349 ப்ளான் ரூ.399 ஆகவும்,
தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.399 ப்ளான் ரூ.449 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களுக்கான ரிசார்ஜ் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
ஆண்டு கட்டணத்தை பொறுத்தவரை 365 நாள் வேலிடிட்டியுடன் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கும் ரூ.2,999 ப்ளான் ரூ.3,599 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தமிழிசையை அழைத்த அமித்ஷா: டெல்லி சந்திப்பின் பின்னணி!
மூன்று மாதம் அரசியலுக்கு அண்ணாமலை விடுமுறை?
மாநில அரசு ஏதேனும் விலை உயர்த்தினால் மட்டும் பொங்குறவைங்க, இதுக்கு கம்னு இருப்பாய்ங்களே.,