ஜியோ பயனாளர்கள் ஒரு நாளைக்கு 8 ரூபாய்க்கும் குறைவான செலவில் 2.5GB டேட்டாவை பயன்படுத்த முடியும்.
ஜியோவின் ரூ.2,999 திட்டம் பற்றி அனைவருக்கும் தெரியும். இந்த திட்டத்தில் 365 நாட்களுக்கு 912.5 GB டேட்டா அதாவது ஒரு நாளைக்கு 2.5GB டேட்டா, 100 எஸ்.எம்.எஸ் மற்றும் அன்லிமிடெட் காலிங் என ஒரு முழு திட்டமாக வருகிறது.
தற்போது இத்திட்டத்தில் கூடுதலாக 23 நாட்கள் இணைந்துள்ளது. இந்த 365 நாட்களுடன் 23 நாட்கள் இணைந்து 388 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கிறது. இதன்படி ஒரு நாளைக்கு 8 ரூபாய்க்கும் குறைவான செலவில் 2.5GB டேட்டாவை பயன்படுத்த முடியும்.
ரூ.2,999 திட்டத்தில் ஜியோ சினிமா, ஜியோ டிவி மற்றும் ஜியோ க்ளவுட் ஆகியவற்றிற்கான இலவச சந்தாவும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் டேட்டா தீர்ந்த பிறகும் பயனாளர்கள் இலவச டேட்டாவை பயன்படுத்த முடியும். ஆனால் இணைய வேகமானது குறைந்த அளவில் மட்டுமே இருக்கும். இணைய வேகம் குறைவாக இருந்தாலும் இயங்கும் செயலிகளான வாட்ஸ்ஆப் மற்றும் முகநூல் போன்றவற்றை பயன்படுத்த முடியும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பவித்ரா பலராமன்
ராஜஸ்தான் முதல்வராக முதல்முறை எம்.எல்.ஏ தேர்வு!
போலி பாஸ்போர்ட்.. டேவிட்சன் தேவாசீர்வாதம் மீதான புகாரில் ஆதாரம் இல்லை: தமிழக அரசு