கார் வைத்துள்ள அனைவருக்குமே திருட்டு பயம் என்பது அதிக அளவில் இருக்கத்தான் செய்கிறது. இப்போது கார் உரிமையாளர்களை பெருமூச்சு விட வைக்கும் வகையில் ஒரு சாதனத்தை வெளியிட்டுள்ளது ஜியோ.
ஜியோ மோட்டிவ் 4G GPS-ஐ வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம். இந்த சாதனத்தை பயன்படுத்துவதால் திருட்டு மற்றும் விபத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளது ஜியோ நிறுவனம்.
இந்த சாதனமானது லைவ் டிராக்கிங் 4G GPS கண்காணிப்பு சப்போர்ட் உடன் வருவதோடு மட்டுமல்லாமல் வாகனம் இருக்கும் இடம் மற்றும் இயங்கும் திசை போன்ற அப்டேட்களை தொடர்ச்சியாக வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜியோ மோட்டிவ் சாதனத்தை பயன்படுத்தி வாகனம் இருக்கும் இடத்தை சுற்றி எல்லைகள் அமைக்க முடியும். அமைத்துள்ள எல்லைக்குள் வாகனம் நுழையும் போதும் வெளியேறும் போதும் அலர்ட் கிடைக்கும்.
ஜியோ அறிவித்துள்ள குறிப்பிட்ட கால சலுகையின் படி ஜியோ இலவச சந்தாவுடன் எந்த கட்டணமும் செலுத்தாமல் ஜியோ சிம் கார்டுடன் இணைத்து ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம். ஒரு வருடத்திற்கு பிறகு வருடத்திற்கு ரூ.599 செலுத்தி தொடர்ந்து பயன்படுத்தலாம்.
ரூ.4,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ள ஜியோ மோட்டிவ் சாதனத்தை ரிலையன்ஸ் டிஜிட்டல் தளத்தில் வாங்கும் போது 10 சதவிகித கூடுதல் தள்ளுபடியில் கிடைக்கிறது.
Jio.com, அமேசான் மற்றும் முன்னணி ரீடைல் ஸ்டோர்களிலும் ஜியோ மோட்டிவ் ட்ராக்கர் விற்பனையில் உள்ளது. மேலும் ஒரு வருட வாரண்டி உடன் வருகிறது.
இதை காரின் ஸ்டீயரிங் அடியில் உள்ள ஆன் போர்ட் டிடெக்டிவ் (OBD) போர்ட் உடன் சுலபமாக இணைக்க முடியும். இந்த ட்ராக்கர் ஆனது வைபை சப்போர்ட் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ராக்கரை பயன்படுத்தும் போது காரை யாரேனும் திருடினாலோ அல்லது விபத்து நேரிட்டாலோ உடனடியாக இணைத்துள்ள எண்ணிற்கு அலர்ட் சென்றுவிடும்.
-பவித்ரா பலராமன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சத்தீஸ்கர், மிசோரம் தேர்தல்: வாக்குப்பதிவு சதவிகிதம் எவ்வளவு?