jio announce prepaid recharge plans

வாடிக்கையாளர்களுக்கு ஜியோ கொடுத்த இன்ப அதிர்ச்சி!

ஆரம்ப காலத்தில் இலவச சிம் கார்டு, எல்லையில்லா டேட்டா என வாரி வழங்கிய ஜியோ காலப்போக்கில் குறைந்த விலையில் ரீசார்ஜ் என மாற்றியது. விலை கூடினாலும் ஜியோவிற்கான வாடிக்கையாளர்கள் குறையவில்லை.

இலவசத்தில் தொடங்கிய ஜியோ தற்போது மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களை போல் அவற்றிற்கு சற்றும் சலைக்காமல் ரீசார்ஜ் தொகையை அதிகப்படுத்தியுள்ளது.

சத்தமில்லாமல் புதிதாக ஒரு வருடத்திற்கான ப்ரீபெய்டு ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலையானது இதுவரை இல்லாத வகையில் ரூ.3,662 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.3,662 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதால் மொத்தமாக 912.5GB டேட்டா ஒரு ஆண்டுக்கு கிடைக்கும் அதாவது ஒரு நாளைக்கு 2.5GB என்ற கணக்கில் வழங்கப்பட்டுள்ளது. மற்ற திட்டங்களைப் போலவே ஒரு நாளைக்கு 100 SMS அன்லிமிடெட் கால் போன்றவைகளும் உண்டு.

இந்த ப்ரீபெய்டு திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் ZEE5 மற்றும் SonyLIV ஆகிய இரண்டு ஓடிடி தளங்களை ஆண்டு முழுவதும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

மற்றபடி எப்போதும்போல் JioTV, Jio cinema மற்றும் Jio cloud போன்ற மற்ற ஓடிடிகளையும் இலவசமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இதன் விலை சற்று கூடுதலாக இருந்தாலும் ZEE5 மற்றும் SonyLIV ஆகிய ஓடிடிகளை தனித்தனியாக ரீசார்ஜ் செய்து உபயோகப் படுத்தவதை ஒப்பிடும் போது ஒரு வருட டேட்டாவுடன் வரும் இந்த திட்டம் சிறப்பான திட்டமாகவே பார்க்கப்படுகிறது.

-பவித்ரா பலராமன்

வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!

மோசடி வழக்கில் லதா ரஜினி: மீண்டும் விசாரணை…காரணம் என்ன?

திருவள்ளூரில் இரண்டு ரவுடிகள் என்கவுண்டர்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts