ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல திட்டங்களை அறிவித்து வருகிறது, சமீபத்தில் இந்நிறுவனம் பட்ஜெட் விலைக்குள் லேப்டாப் நினைப்பவர்களுக்கென்றே லேப்டாப்பை அறிமுகப்படுத்தியது.
இதுமட்டுமின்றி பல சிறப்பம்சங்களை கொண்ட, குறைவான விலைகொண்ட மொபைலையும் ஜியோ நிறுவனம் நீண்ட நாட்களாக மக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது எங்கு பார்த்தாலும் 5ஜி மோகம் பெருகிவரும் நிலையில் ஜியோ நிறுவனமும் தனது 5ஜி மொபைலை சந்தையில் விற்பனைக்கு கொண்டுவர தயாராகி வருகிறது.
ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் இன்னும் நிறுவனம் இதுகுறித்த எவ்வித அதிகாரபூர்வ தகவல்களையும் வெளியிடவில்லை.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்போர்ட்ஸ் மாடல் எண் LS1654QB5 ஆகும், இந்த ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 480+ எஸ்ஓசி உடன் அட்ரீனோ 619 ஜிபியூ உடன் இயங்குகிறது.
இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் உடன் கிடைக்கிறது, இதில் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 12 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கிடைக்கிறது.
கீக்பெஞ்சின் சிங்கிள்-கோர் மற்றும் மல்டி-கோர் சோதனைகளில் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போனானது 549 மற்றும் 1661 மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
மேலும் ஜியோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் அப்டேட் வீதத்துடன் 6.5 இன்ச் ஹெச்டி + எல்சிடி டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும்.
ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இரண்டு கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் மற்றும் இது 18 W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000 எம்ஏஹெச் பேட்டரியை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
‘ஜெயிலர்’ அப்டேட் : முத்துவேல் பாண்டியன் பெயருக்கு இதுதான் காரணமா!
அமைச்சராகிறார் உதயநிதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
O.k. well done !