ரஜனிகாந்த்தின் ஜெயிலர் படத்தின் டிரெய்லர் நியூயார்க்கில் உள்ள டைம் ஸ்கொயரில் ஒளிப்பரப்பட்டது.
நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகியுள்ளது. ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, தமன்னா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ள நிலையில் தீவிரமாக புரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளது.
ஜெயிலர் படத்தின் பாடல்கள், இசை வெளியீட்டு விழாவை தொடர்ந்து ஆகஸ்ட் 2 ஆம் தேதி டிரெய்லரை படக்குழு வெளியிட்டது.
டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு படத்தின் கதை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நாளை “ரத்தமாரே” பாடல் மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜெயிலர் டிரெய்லர் அமெரிக்கா நியூயார்க் நகரில் உள்ள டைம் ஸ்கொயரில் நேற்று ஒளிப்பரப்பட்டது. இதனை அங்கு கூடியிருந்த ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர்.
டிரெய்லரை பார்த்து ரசித்த சிலர் ரஜினிகாந்த் எண்ட்ரியின் போது விசில் அடித்தும் உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த வீடியோவை சன் பிக்கர்ஸ் அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
மோனிஷா