இயர்போன் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. பக்கத்தில் இருப்பவர்களுக்கு தொந்தரவு இல்லாமல் நமக்கு பிடித்த பாடலையோ, படங்களையோ பார்க்கும் வகையில் தயாரிக்கப்பட்டது தான் இயர்போன்கள்.
இன்றைய நாட்களில் எண்ணிலடங்கா இயர்போன் ப்ராண்டுகளும், வகைகளும் வந்து விட்டன. அதில் மிகவும் பிரபலமான ப்ராண்ட் தான் ஜாப்ரா.
ஜாப்ரா ப்ராண்ட் இயர்போன்கள் என்றாலே வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
இப்படி ஆடியோ சாதனங்கள் தயாரிப்பில் பெயர்போன நிறுவனமான ஜாப்ரா, தற்போது எலைட் 8 மற்றும் எலைட் 10 என்ற இரண்டு வயர்லெஸ் இயர்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
எலைட் 8 மாடல் இயர்போன் சார்ஜிங் கேசில் 32 மணி நேரம் செயல்படுவதற்கான மின்திறன் சேமிக்கப்பட்டு தொடர்ந்து 8 மணி நேரம் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
எலைட் 10 மாடல் சார்ஜிங் கேசில் 27 மணி நேரம் செயல்படுவதற்கான மின்திறன் சேமிக்கப்பட்டு தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மாடல் இயர்போன்களில் எலைட் 8 மாடல் உறுதியான மற்றும் நீண்ட நேரம் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டள்ளது.
எலைட் 10 மாடலானது ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ் உடன் இணைத்து பயன்படுத்த முடியும். போன் மற்றும் கூடுதலாக ஐஓஎஸ், ஆன்ராய்டு, கம்ப்யூட்டர் அல்லது டேப் என எதில் வேண்டுமானாலும் இணைத்து மாற்றி மாற்றி பயன்படுத்தலாம்.
புளூடூத் வசதி உள்ளதால் எளிதில் ஸ்மார்ட் வாட்ச் உடனும் இணைத்து பயன்படுத்தலாம். எலைட் 8 மற்றும் 10 இரண்டு மாடல்களுமே டால்பி அட்மோஸ் ஆடியோ சிஸ்டம் கொண்டது.
மழை, வெப்பநிலை என அனைத்து சூழல்களிலும் மிக சிறப்பாக செயல்படும் இந்த இயர் போன்களின் விலை மற்றும் கிடைக்கும் நிறங்களை பார்க்கலாம்.
எலைட் 8 மாடலானது ப்ளாக், கேரமல், கிரே என மூன்று நிறங்களில் கிடைக்கிறது, இதன் விலை ரூ.17,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ப்ளாக், கோகோ, கிரீம் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும் எலைட் 10, ரூ.20,999 என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.
எலைட் 8 மற்றும் எலைட் 10 இயர்போன்கள், சுற்றுப்புற இரைச்சல்களை தவிர்த்து நல்ல தரமான ஆடியோ வழங்கும் டால்பி அட்மோஸ் அடாப்டிவ் ஹைப்ரிட் நுட்பத்தை கொண்டுள்ளது.
அமேசான் தளத்தில் வாங்கினால் இரண்டு இயர்போன்களும் தலா ரூ.1000 தள்ளுபடியில் கிடைக்கிறது.
-பவித்ரா பலராமன்
சென்னை தாம்பரத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
ரூ.2,000 நோட்டுகளை மாற்ற நாளை கடைசி நாள்!